அதிர்ச்சி…! விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் பிக்பாஸ் பிரபலம்…!
பிக்பாஸ் பிரபலம், விமர்சகர், நடிகர் கத்தி மகேஷ் கார் விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.
சின்னத்திரை தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகள் இருந்தாலும் அனைத்து தரப்பினரையும் புரட்டி போட்டி நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி தமிழில் மட்டுமல்ல, தெலுங்கு மொழியிலும் படு பிரபலம்.
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் போட்டியாளராக பங்கேற்றவர் கத்தி மகேஷ். இவர் நடிகர் மட்டுமல்ல… சிறந்த விமர்சகரும் கூட. காரில் சென்று கொண்டிருந்த போது விபத்தை சந்தித்து இருக்கிறார்.
அவரது கார் மீது அவ்வழியே சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. இதையடுத்து உடனடியாக கத்தி மகேஷ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
தீவிர சிகிச்சையில் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலைய மிகவும் மோசம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.