17 வயசு பையன்..! எந்த ஊர் போனாலும் தேடி வந்து கடிக்கும் பாம்பு..! குழம்பும் மருத்துவர்கள்
லக்னோ: உ.பி மாநிலத்தில் 17 வயது பையனை ஒரு பாம்பு எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து கடித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராம்புர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சந்திரமவுலி மிஸ்ரா. அவரது 17 மகன் யாஷ்ராஜ் மிஸ்ரா. இந்த பையனுக்கு இப்போது ஒரு பிரச்னை. இவர் எங்கு போனாலும் ஒரு பாம்பு துரத்துகிறது. பின்னர் துரத்தி, துரத்தி கடிக்கிறது.
முதலில் ஒரு முறை கடி வாங்கி மருத்துவமனை வரை சென்று உயிர் பிழைத்தார் யாஷ்ராஜ். கடந்த மாதம் இந்த சம்பவம் நடந்தது. அதன்பிறகு, சில நாட்கள் கடித்து அதே பாம்பு, இந்த பையனை பின் தொடர்ந்து வந்து கடித்துள்ளது.
மறுபடியும் மருத்துவமனை, உயிருக்கு போராட்டம் என்று சந்திரமவுலி குடும்பத்தினர் கலங்கினர். ஒரு மாற்றத்துக்காக தமது மகன் யாஷ்ராஜை பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளார் சந்திரமவுலி.
அவர் இருக்கும் இடத்தை தேடிச் சென்று மறுபடியும் அதே பாம்பு கடித்துள்ளது. மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு யாஷ்ராஜ் காப்பாற்றப்பட்டார். கிட்டத்தட்ட 8 முறை அந்த பாம்பு விடாமல் துரத்தி, துரத்தி கடித்துள்ளது.
அதன் பிறகும், யாஷ்ராஜை அந்த பாம்பு விடாமல் துரத்த, பீதியடைந்த சந்திரமவுலி பாம்பாட்டிகளிடம் சென்று குறி கேட்டுள்ளார். அவர்களும் என்ன பிரச்னை என்று தெரியவில்லை என்று கூற மருத்துவர்களும் என்ன காரணம் என்று புரியாமல் குழம்பி தவிக்கின்றனர். தமது மகனை பாம்பிடம் இருந்து எப்படி காப்பாற்றுவது என்று தெரியாமல் அச்சத்தில் உறைந்து தவிக்கின்றனர் சந்திரமவுலி குடும்பத்தினர்.