Sunday, May 04 01:00 pm

Breaking News

Trending News :

no image

#ரம்பாவிடம்அத்துமீறிய_ரஜினி குபீர் கிளப்பிய வீடியோ


நடிகை ரம்பாவிடம் நடிகர் ரஜினிகாந்த் சில்மிஷம் செய்த சம்பவம் தான் இப்போது சினிமா உலகில் பெரும் பேச்சாக மாறி இருக்கிறது.

தொடையழகி ரம்பா… இவரை அவ்வளவு எளிதாக யாரும் மறக்க முடியாது. பல ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இவரின் தொடையையும், நடையையும் ரசிப்பதற்கே இன்றும் ரசிகர்கள் கூட்டம் உண்டு.

திருமணம் ஆன பின்னர் அரிதாரம் பூசுவதை கைவிட்ட அவர், என்றோ அளித்த பேட்டி ஒன்று கடும் வைரலாகி இருக்கிறது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சில்மிஷத்தையும் அக்குவேர் ஆணிவேராக பிரித்து போட்டு இருக்கிறது.

நடிகை ரம்பா, ரஜினியுடன் அருணாச்சலம் படத்தில் நடித்துள்ளார். படம் மெகாஹிட். இயக்குநர் சுந்தர்.சி. பாடல்கள் மட்டும் அல்ல, வசனங்கள் சூப்பர் என்று ரசிகர்களை சொல்ல வைத்த படம்.

ஆனால் இந்த படத்தில் நடந்த சில சம்பவங்களை நடிகை ரம்பா இப்போது வெளியிட்டு இருக்கிறார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி இப்போது வெளியாகி சக்கை போடு போடுகிறது.

அதில் தமது சினிமா அனுபவங்களை கூறிய அவர், அருணாச்சலம் பட ஷூட்டிங்கின் போது கரண்ட் கட் ஆச்சு, அப்போது இருட்டில் தம்மை பின்புறமாக ரஜினிகாந்த் தட்டிச் சென்றார் என்று கூறி இருக்கிறார்.

தம்மை தொட்டது யார் என்று அனைவரும் கேட்க, பின்னர் தான் அது ரஜினி என்று தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேட்டி தான் இப்போது இணையவாசிகளின் வாய்களுக்கு அவலாக மாறி இருக்கிறது.

ரம்பாவை தொட்ட ரஜினி, எஜமான் படத்தில் மீனாவை சீண்டியிருப்பாரா? போக்சோ பாயுமா? என்று இஷ்டத்துக்கும் கமெண்டுகளை அள்ளி வீசி இருக்கின்றனர்.

கடந்த காலங்களில் படப்பிடிப்பின் போது பெண்களிடம் பேசியது பற்றி ரஜினிகாந்த் கூறிய வீடியோ காட்சிகளை வெளியிட்டு ரஜினிகாந்தை கிழி, கிழின்னு கிழித்து வருகின்றனர்.

 

Most Popular