ரஜினி, கமல்… இணைந்த கைகள்…! 21 ஆண்டுகள் கழித்து தரமான VIDEO
சென்னை; கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் கழித்து ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் ஷூட்டிங்கில் ஒரே தளத்தில் சந்தித்துக் கொண்ட நிகழ்வு அரங்கேறி உள்ளது.
தமிழ் சினிமாவின் ஆக பெரும் தலைகள் கமல்ஹாசன், ரஜினிகாந்த். வயதானலும், தங்களின் சினிமா என்ற தளத்தை விடாமல் கெட்டியாக பிடித்து கொண்டிருப்பவர்கள். 2 பேரின் ரசிகர்களும் அப்படியே…!
இன்னமும் திரையுலகில் ஹிட் படங்கள் கொடுத்து கொண்டிருக்கும் இவர்கள் இருவரையும் கண்டு பிரமிக்காத பிரபலங்களே இல்லை. சினிமாவில் தனித்தனி ரூட்டில் இருவரும் இருந்தாலும் நட்பின் இலக்கணம் தனி.
அந்த வகையில் இருவரும் ஒரே ஷூட்டிங் ஸ்பாட்டில் இன்று சந்தித்து கொண்டு உள்ளனர். அதுவும் எப்படி… 21 ஆண்டுகள் கழித்து…! கமலின் இந்தியன் 2, ரஜினியின் தலைவர் 170(இந்த படத்துக்கு இன்னமும் பெயர் வைக்கப்படவில்லை)படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரபலமான ஸ்டூடியோவில் படு சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.
படங்கள் பற்றி அவ்வப்போது அப்டேட்டுகள் வந்தாலும், லேட்டஸ்ட்டாக இருவரும் சந்தித்து கைகுலுக்கி கொண்டு உள்ளனர். இருவர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இடத்தில் தான் இந்த சந்திப்பு. இவர்களின் 2 படங்களையும் லைகா நிறுவனம் தான் தயாரிக்கிறது.
ரஜினி, கமலின் சந்திப்பு பற்றிய போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி சூப்பர் என்று சொல்ல வைத்துள்ளன. போட்டோக்களில் கமலை விட இளமையான தோற்றத்தில் ரஜினி தெரிவது தான் ஹைலைட். இது தவிர, 21 ஆண்டுகள் பிறகு இருவரும் ஒரே படப்பிடிப்பு தளத்தில் ஷூட்டிங் நடப்பது ஆச்சரியம். இதன் வீடியோ கீழே இணைக்கப்பட்டு உள்ளது.