அண்ணா யூனிவர்சிட்டி மாணவரா..? இதுதான் எக்சாம் தேதி…!
சென்னை: அண்ணா யூனிவர்சிட்டி மாணவர்களுக்கான தேர்வு தேதியை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி கூறி இருப்பதாவது: 2017ம் ஆண்டு ரெகுலர் மாணவர்களுக்கு முதுகலை, இளங்கலை பொறியியல் பட்டப்படிப்புகளுக்கு வரும் 14ம் தேதி முதல் தேர்வுகள் நடத்தப்படும். அனைத்து தேர்வுகளும் ஆன்லைனில் தான் நடத்தப்படும்.
மற்ற ரெகுலேஷனுக்கான தேர்வுகள் 21ம் தேதி தொடங்கும். கடந்த முறை தேர்வு எழுதாத, கட்டணம் செலுத்தாத மாணவர்கள் வரும் 3ம் தேதிக்குள் கட்டணம் செலுத்திக் கொள்ளலாம். ஆனால் ஏற்கனவே தேர்வு எழுதியவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. சில பல்கலைக்கழகங்களில் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு விட்டாலும், மற்ற பல்கலைக்கழகங்களில் ஜூலைக்குள் தேர்வுகள் நடத்தப்பட்டுவிடும் என்று கூறினார்.