Sunday, May 04 11:43 am

Breaking News

Trending News :

no image

10வது மாடி… எஸ்பி வேலுமணி…! புரியாமல் தவித்த அதிமுகவினர்


சென்னை: சென்னையில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒன்றல்ல….இரண்டல்ல…. கிட்டத்தட்ட 52 இடங்களில் இன்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் இல்லம், உறவினர்கள் வீடு, அலுவலகங்கள் என ஒன்றும் தப்பவில்லை.

எப்படியும் இன்று ரெய்டு நடத்தி விடுவது என்று கடந்த பல நாட்களாகவே அதற்கான முன்னோட்டங்களுடன் சென்னையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் பக்கா ஸ்கெட்ச் போட்டு காலை முதல் களத்தில் இறங்கி உள்ளனர். கோவையில் வேலுமணியின் சுகுணாபுரம் வீட்டில் ரெய்டை அறிந்த அதிமுக எம்எல்ஏக்கள், அவரது ஆதரவாளர்கள், தொண்டர்கள் பலர் குவிந்துள்ளனர்.

சென்னையிலும் அவரது வீட்டில் ரெய்டு என்று தகவல்கள் அறிந்த மாவட்ட செயலாளர்கள் வேலுமணி எங்கிருக்கிறார் என்று அறியாமல் முதலில் சென்னை ஆர்ஏ புரம் வீட்டுக்கு செல்ல எத்தனித்தனர். ஆனால் விசாரித்ததில் அவர் அங்கும் இல்லை என்று தெரிந்தது.

கடைசியாக எம்எல்ஏ ஹாஸ்டலில் எஸ்பி வேலுமணி இருக்கிறார் என்பதை அறிந்து மா.செக்கள் ராஜேஷ்பாபு, விருகை ரவி, பாலகங்கா உள்ளிட்டோர் படைஎடுத்தனர். அவர்களுடன் 100க்கான தொண்டர்களும் எம்எல்ஏ ஹாஸ்டலுக்கு படையெடுக்க அந்த பகுதியே பரபரப்பானது.

இது நடக்கும் என்று தெரிந்து போலீசாரும் முன்னதாகவே குவிக்கப்பட இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு வாக்குவாதம் என முற்றி அங்கே ரசாபாசமானது. வீட்டில் இல்லாமல் எஸ்பி வேலுமணி ஏன் எம்எல்ஏ ஹாஸ்டலில் அவர் ஏன் இருந்தார் என்பது பற்றிய விவரமும் இப்போது வெளியாகி உள்ளது.

விரைவில் சட்டசபை கூட உள்ளது. அதோடு சட்டமன்ற கொறடா என்பதால் அது குறித்த பணிகள் நிறைய இருந்துள்ளன. அதற்காக சென்னை வந்த அவர் அரசினர் தோட்டத்தில் எம்எல்ஏ என்ற அடிப்படையில் தமக்கு ஒதுக்கப்பட்ட அறையில் இருந்துள்ளார்.

ரெய்டு பல பக்கம் நடக்க… நடக்க… தனியாக ஒரு குழு நேராக எம்எல்ஏ ஹாஸ்டலுக்கு போயிருக்கிறது. 10வது மாடியில் இருக்கும் அவரது அறையில் சரியாக காலை 6 மணி முதல் அவரிடம் லஞ்ச ஒழிப்பு இலாகாவினர் துருவி, துருவி விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் கசிந்து இருக்கின்றன.

கையில் வைத்திருக்கும் பல்வேறு முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றை வேலுமணி முன்பு வைத்து முழு விவரங்களையும் போலீசார் கேட்டு வருகின்றனராம். ஆவணங்கள் பற்றிய முழு தகவல்கள், அதன் பின்னணி விவரங்கள் முன்பே கைவசம் இருந்தாலும் படிப்படியான விசாரணைக்கு பின்னர் அனைத்து தகவல்களும் விரைவில் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

Most Popular