Sunday, May 04 01:10 pm

Breaking News

Trending News :

no image

ஷூட்டிங்கில் பயங்கரம்…! விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்…!


சென்னை: பிரபல நடிகர் சூர்யா படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா. திரைப்படங்கள் மட்டும் அல்லாது அகரம் என்ற அறக்கட்டளை மூலம் நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருபவர்.

அவர் தற்போது சிறுத்தை சிவா டைரக்ஷனில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 38 மொழிகளில் 3டி பாணியில் அடுத்தாண்டு ரிலீசாகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு துரிதகதியில் நடந்து வருகிறது.

இந் நிலையில் பட ஷூட்டிங்கில் எதிர்பாராத சம்பவமாக அவருக்கு விபத்து நேர்ந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஈவிபி பிலிம் சிட்டியில் தான் இந்த  விபத்து அரங்கேறி இருக்கிறது. சண்டை காட்சியின் போது திடீரென கேமரா விழுந்து நடிகர் சூர்யாவின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு உள்ளது.

இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். 

Most Popular