அதிமுக முகாமில் பாமகவின் ஸ்லீப்பர் செல்…! முக்கிய தலைவர் பெயர் சொல்லி பொங்கிய சுதிஷ்…!
சென்னை: அதிமுகவில் பாமகவின் ஸ்லிப்பர் செல்லாக கேபி முனுசாமி செயல்படுகிறார் என்று தேமுதிக எல்கே சுதிஷ் பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டு உள்ளார்.
கேட்ட தொகுதிகள் கிடைக்காதது, கட்சியை மதிக்காதது என அதிமுக கூட்டணியில் பல தருணங்களில் இதுவரை பொறுத்திருந்த தேமுதிக இன்று கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிக்கை வாயிலாக விஜயகாந்த் அறிவிக்க மறுபக்கம் கட்சி அலுவலகம் முன்பு திரண்டிருந்த தேமுதிக தொண்டர்கள் சந்தோஷ முழக்கமிட்டனர்.
அதே தருணத்தில் கூட்டணியில் விலகுவது குறித்து செய்தியாளர்களை சந்தித்த எல்கே சுதிஷ் ஆவேசமாக பேசினார். கூட்டணி பேச்சுவார்த்தையில் அதிமுக தங்களை நடத்தியது என்பதை போட்டு உடைத்துவிட்டார்.
அவர் கூறியதாவது: சட்டசபை தேர்தலை முன்னிட்டு நாங்கள் கேட்ட தொகுதிகளையும் கேட்ட எண்ணிக்கையும் அதிமுக வழங்க தயாராக இல்லை. எனவே அதிமுகவின் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம்.
தேமுதிக தொண்டர்களுக்கு இன்று தான் தீபாவளி. தனித்து போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்படும். அனைத்து தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழப்பார்கள். முக்கியமாக அங்கிருக்கும் கேபி முனுசாமி பாமகவின் ஸ்லீப்பர் செல். அவர் அதிமுகவுக்காக அங்கே இல்லை. பாமகவின் கொள்கை பரப்பு செயலாளராக அதிமுகவில் பணியாற்றி கொண்டிருக்கிறார் என்று ஆவேசமானார்.