சொந்த வாழ்க்கையை விடுங்க… ரஜினி மகளின் இந்த வீடியோவை பாருங்க
சென்னை: ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வெறித்தனமான வீடியோவை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பகிர்ந்து அசர வைத்துள்ளார்.
சமூக வலைதளங்களில் எப்போதும் படு ஆக்டிவ்வாக இருப்பவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தமது குடும்ப வாழ்க்கை எதிர்பார்த்தபடி இல்லை என்ற கவலை இருந்தாலும் அதை புறந்தள்ளிவிட்டு அன்றாடம் ஒரு பதிவை இன்ஸ்டாகிராமில் போட்டு விடுவார்.
அதிலும் குறிப்பாக ஜிம்மில் தாம் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை போட்டு கலக்குபவர். அவரின் லேட்டஸ்ட் வீடியோ தான் இப்போது இணையத்தை கலக்கி வருகிறது. கைகளில் தம்புல்ஸ் எடுப்பதும், தோள்பட்டைகளுக்கு வலு கொடுக்கும் வகையில் ஒர்க் அவுட் செய்யும் காட்சிகளும் அதில் இடம்பெற்று உள்ளன.
கிட்டத்தட்ட 1 நிமிடம் ஓடும் இந்த பதிவை இன்ஸ்டாகிராமில் பார்க்கும் பலரும் பாராட்டுகளை தெரிவித்து அசந்து போயிருக்கின்றனர். இன்னும் சிலர் நெகட்டிவ்வான கருத்துளையும் பதிவிட்டு உள்ளனர். வீட்டு வேலை செய்தால் இப்படி ஒரு ஒர்க் அவுட் அவசியமே இல்லை என்று சிலர் விமர்சித்து உள்ளனர்.
வொய் திஸ் கொலவெறி என்ற பாடல் இந்த சிச்சுவேஷனுக்கு பொருத்தமாக இருக்கிறது என்றும் சிலர் கிண்டலடித்துள்ளனர்.