கேப்டனை குத்திட்டாங்க… முதுகில்…! அண்ணியாரின் அட்டாக்
சென்னை: நம்பியவர்களே கேப்டன் விஜயகாந்தை முதுகில் குத்திவிட்டனர் என்று பிரேமலதா அதிரடியாக கூறி இருக்கிறார்.
தேமுதிகவின் புதிய பொது செயலாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார் பிரேமலதா விஜயகாந்த். 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலை எதிர்கொள்ள இந்த நடவடிக்கை அவசியம் என்றாலும், விஜயகாந்தின் உடல்நிலை பற்றிய கவலைதான் தொண்டர்களுக்கு…!
இந் நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி தான் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பாக இருக்கிறது. பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது;
விஜயகாந்த் நடிகராக இருந்தவரை சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தினோம். ஆனால் அரசியலில், கட்சி ஆரம்பித்தாரோ அப்போதே அவருக்கு பலரும் எதிராளியாகினர். அனைத்தையும் தாங்கி எதிர்நீச்சல் போட்டார்.
அதற்கான அங்கீகாரத்தை மக்கள் எங்களுக்கு வழங்கினர். 2011ம் ஆண்டு வரை யாருடனும் தேமுதிக கூட்டணி இல்லை. எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்த 3 மாதங்களில் அவர் யாரை நம்பினாரோ, அவர்கள் முதுகில் குத்தி விட்டனர்.
துரோகங்கள், தொடர் சறுக்கல்கள் அதனால் ஏற்பட்ட வலிதான், விஜயகாந்த் உடலை பாதித்தது. 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் யாருடன் கூடடணி என்பதை பரிசீலிக்க வேண்டும். விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்போம் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.