இ பாஸ் முறையை தொடரலாமா..? கலெக்டர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
சென்னை: இ பாஸ் முறை குறித்து இறுதி முடிவை எடுக்க ஆட்சியர்களுடன் 29ம் தேதி ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்டங்கள், மாநிலங்களுக்கு இடையிலான பயணம் செய்ய இ பாஸ் முறை அமலுக்கு வந்தது. இந்த முறையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழகத் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இது தொடர்பாக மாநில தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதிய மத்திய அரசு, மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலும் பயணிக்க தடை விதிக்கக் கூடாது என்று தெரிவித்தது.
இந் நிலையில், தமிழகத்தில் இ பாஸ் குறித்து இறுதி முடிவு எடுக்க கலெக்டர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 29ம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.
வரும் 31ம் தேதியோடு லாக்டவுன் முடிவடையும் என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும் அவர் ஆலோசிக்க உள்ளார்.