பிரபல நடிகர் கார்த்திக்குக்கு வீட்டில் நேர்ந்த சம்பவம்…! ஹாஸ்பிட்டலுக்கு ஓடிய குடும்பம்…!
சென்னை: பிரபல நடிகர் கார்த்திக் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அலைகள் ஓய்வதில்லை… இந்த படம் தான் நடிகர் முத்துராமனின் மகனான கார்த்திக்கின் முதல் படம். மிக பெரும் வெற்றி பெற்ற இந்த பயணத்தின் மூலம் கோலிவுட்டில் கால் எடுத்து வைத்த கார்த்திக் பின்னாளில் நவரச நாயகனாக வளர்ந்தார். 1980, 90களில் இவர்தான் காதல் இளவரசன்.
இப்போது கதாநாயகனாக நடிக்காவிட்டாலும், குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்த அசத்து வருகிறார். அவ்வப்போது வில்லன் வேடமும் இவருக்கு பொருந்துகிறது.
இந் நிலையில் சென்னையில் உள்ள தமது வீட்டில் அவர் உடற்பயிற்சி செய்த போது தவறி கீழே விழுந்துள்ளார். காலில் பலத்த ஏற்பட்டு கதறி இருக்கிறார். வலியால் துடித்த அவர் உடனடியாக பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
அவருக்கு உடனடியாக மருத்துவர்கள் ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்தனர். அப்போது அவருக்கு காலில் ஆபரேஷன் செய்த இடத்தில் மீண்டும் அடிபட்டு எலும்பு விரிசல் விட்டு உள்ளது தெரிய வந்தது.
அவருக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது நடிகர் கார்த்திக் தீ இவன், அந்தகன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். வழக்கமான தமது பாணியில் குணசித்திர வேடங்களை அவர் இந்த படங்களில் ஏற்றுள்ளார்.