Sunday, May 04 12:55 pm

Breaking News

Trending News :

no image

கையெடுத்து கும்பிட்ட நடிகர் விஜய்..! பரபர வீடியோ


ஒரு பெரிய பஸ், அதன் மீது ஒற்றை ஆளாக ஏறி நின்றபடி கையெடுத்து நடிகர் விஜய் கும்பிடும் வீடியோ தான் ரசிகர்கள் மத்தியில் மாஸ்.

நடிகர் விஜய்க்கு அரசியலில் நுழைந்துவிட்டார், அவரது கட்சிக்கு தமிழக வெற்றிக்கழகம் என்று பெயர். உறுப்பினர்கள் சேர்க்கை அத்தனை லட்சம், இத்தனை லட்சம் என தகவல்கள் உலா வந்தன.

அரசியலில் தான் இனி கவனம் என்பதால் GOAT  என்ற படமே அவருக்கு கடைசி படமாக இருக்கலாம். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. கேரளாவில் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு அவர் சென்றிருக்கிறார்.

தமிழகத்தை விட கேரளாவில் விஜய் என்றால் ரசிகர்களுக்கு கொள்ளை பிரியம். நேற்றைய தினமே அவரை நெருக்கடித்து பார்த்து அதகளம் பண்ணி, காரையும் கண்டமாக்கிவிட்டனர்.

இப்படிப்பட்ட தருணத்தில், ரசிகர்களை சந்திப்பதற்காக படப்பிடிப்பு தளத்தில் அவர் பண்ணிய காரியம் தான் இப்போது வீடியோவாக இணையத்தில் உலா வருகிறது.

விநாயகா என்ற பெயரிடப்பட்ட பேருந்து மீது ஏறி விஜய் கை கூப்பி ரசிகர்களை குதூகலப்படுத்தினார். மேலும் கையை ஆட்டி, ஆட்டியும் உற்சாகப்படுத்தினார்.

Most Popular