அதிமுக ‘மெகா’ மூவ்..! சசிகலா சுற்றுப்பயணத்தில் திடீர் டுவிஸ்ட்..? தொண்டர்கள் 'ஷாக்'
சென்னை: தொண்டர்களை சந்திக்க போவதாக அறிவித்துள்ள சசிகலாவுக்கு செக் வைக்கும் அதிமுக மேற்கொண்ட முயற்சிகளில் முன்னேற்றம் தெரிவதாக கூறப்படுவதால் தொண்டர்கள் ஷாக்கில் இருக்கின்றனர்.
எப்படியும் அதிமுகவை சசிகலா கைப்பற்றி விடுவார் என்று அதீத நம்பிக்கையில் தொண்டர்களும், ஆதரவாளர்களும் காத்து கிடக்கின்றன. சசிகலாவின் இந்த அதிரடியை தடுக்கும் நடவடிக்கைகளிலும் அதிமுக தலைமையும் தீவிரமாக இறங்கி உள்ளதும் தெரிந்த ஒன்று தான்.
அப்படி மேற்கொண்ட நடவடிக்கைகளில் பலன் தெரிய ஆரம்பித்து உள்ளதால் சசிகலாவின் சுற்றுப்பயணத்தில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அதிமுக தலைமை டெல்லிக்கு சென்ற போது பாஜகவிடம் 2 முக்கிய கோரிக்கைகளை வைத்து விட்டு வந்துள்ளது. முதலில் சசிகலாவின் அதிமுகவை கைப்பற்றும் முயற்சியை கைவிட வைக்க வேண்டும், இரண்டாவது முன்னாள் அமைச்சர்கள் மீதான ரெய்டை தடுக்க வேண்டும்.
இந்த 2 கோரிக்கைகளில் பாஜக மேலிடம் முதல் ஒன்றை மட்டும் ஏற்று செயல்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கிவிட்டது. கச்சிதமாக பிளான் பண்ணி காய் நகர்த்தும் விதமாக சசிகலாவுக்கு பெங்களூரு வழக்கில் நெருக்கடி தரும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.
பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த போது விஐபி வசதிகள் வேண்டும் என்பதற்காக 2 கோடி ரூபாய் லஞ்சம் சிறைத்துறை அதிகாரிகள் தரப்ப்டட வழக்கு கிடப்பில் உள்ளது.இப்போது இந்த வழக்கு தூசு தட்டப்பட்டு எடுக்கப்பட்டு உள்ளது. 2 மாதங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவிட்டு இருக்கிறது.
அதிமுகவை நோக்கி சசிகலா நகர ஆரம்பித்தால் இந்த வழக்கின் வேகம் சூடுபிடிக்குமாம். பெங்களூரு வழக்கின் பிடியை இறுக்குவதன் மூலம் சசிகலாவின் நடவடிக்கைகளுக்கு தடை போடமுடியும் என்று பாஜக மேலிடம் நினைத்து நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதாம்.
பிறந்த நாளில் எப்படியும் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்த்திருந்த தொண்டர்கள், சசிகலாவிடம் இருந்து அப்படி எதுவும் வராததால் மிகுந்த ஏமாற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. மாவட்டவாரியாக சுற்றுப்பயணம் நடக்குமா? நடக்காதா? என்று அவர்கள் கேள்விகள் எழுப்ப தொடங்கி உள்ளதாக தெரிகிறது.
பழைய வழக்குகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் நடவடிக்கைகள் வேகம் எடுக்க ஆரம்பித்துவிட்டதால் அவரது சுற்றுப்பயணம் உறுதியாகுமா என்பது தெரியாமல் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. எது எப்படி என்றாலும் சொன்னதை செய்யக்கூடியவர், கட்டாயம் சுற்றுப்பயணத்தை மேற்கொள்வார் என்று அவரது ஆதரவாளர்கள் அடித்துக் கூறுகின்றனர். ஆனால் அதிமுக முகாம் இந்த விவகாரத்தை லேசில் விடாது என்கின்றனர் டெல்லியின் மூவ்களை நன்கறிந்தவர்கள்…!