கொரோனா பிளான் பண்ணி பரப்பியதா…? சீன விஞ்ஞானி 'ஷாக்' தகவல்
பெய்ஜிங்: கொரோனா போன்று எந்த ஒரு வைரசை உருவாக்கும் சோதனையிலும் சீனா இறங்கவில்லை என்று அந்நாட்டு விஞ்ஞானி ஒருவர் கூறி இருக்கிறார்.
2வது ஆண்டாக இன்னமும் ஓடி கொண்டிருக்கிறது கொரோனா பற்றிய செய்திகள். 200 நாடுகளை இன்னமும் உலுக்கி வரும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை, பலிகள் ஆகியவை குறையவில்லை.
சீனாவின் உகான் ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா என்றும் கொரோனா வைரஸ் பரப்பப்பட்டதாக உலக நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் எது உண்மை என்று இதுவரை வெளியாகவில்லை.
இந் நிலையில் கொரோனா வைரசானது உகான் ஆய்வகத்தில் இருந்து கசிந்ததாக கூறப்படுவது உண்மையில்லை என்று அந்நாட்டின் மூத்த விஞ்ஞானி ஷி செங்கிலி திட்டவட்டமாக கூறி இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறி உள்ளதாவது: சீனாவின் உகான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியதற்கு ஆதாரமே இல்லை. இப்படி இல்லாத ஒரு குற்றச்சாட்டுக்கு எப்படி ஆதாரம் தர முடியும்?
ஆனால் உலகம் எப்படி ஒரு ஆதாரமில்லாத குற்றச்சாட்டை முன் வைக்கிறது என்று தெரியவில்லை. தொடர்ந்து விஞ்ஞானிகள் மீது பழி போடுகின்றனர். உகான் ஆய்வகத்தில் வைரசை உருவாக்கும் சோதனைகள் நடத்தப்பட்டதே கிடையாது என்று கூறி இருக்கிறார்.