மரத்தில் ஏறி… சன்னி லியோன் பண்ணிய காரியம்..! இணையத்தில் 'செம' போட்டோ…
மரத்தின் மீது ஏறி கவர்ச்சி நடிகை சன்னி லியோன் செல்போனை நோண்டிய போட்டோ இணையத்தில் லைக்குகளை அள்ளி குவிக்கிறது.
கவர்ச்சி நடிகை சன்னி லியோனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. கேரளாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவரை காண ஒட்டு மொத்த இளைஞர்கள் கூட்டமே திரண்டு வர… அந்த போட்டோ இணையத்தை தெறிக்க வைத்தது.
அவர் தொடர்பான எந்த விஷயமாக இருந்தாலும் அதை ஸ்பெஷலாக அவரது ரசிகர்கள் கொண்டாடுவர். இப்போது அப்படி ஒரு போட்டோ இணையத்தில் தெறி ரகமாக உள்ளது. ஒரு ஓங்கி உயர்ந்த பெரிய மரம்… அதன் மீதேறி உச்சிக்கு போன சன்னி லியோன், கையில் கொண்டு போன பொருள் தான் டாப்கிளாஸ்.
வெள்ளை பேன்ட், கறுப்பு நிற டி சர்ட் போட்டுக் கொண்டு குதிரைவால் கொண்டையுடன் ஸ்டைலாக அமர்ந்திருக்கிறார். அந்த போட்டோவை இணையத்தில் வெளியிட்டுள்ள சன்னி லியோன், கூடவே சொன்ன வார்த்தைகள் தான் டாப்கிளாஸ் ரகம்.
அவர் கூறி இருப்பது இதுதான்: உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள். அதற்கு முன்பாக உங்கள் உரையாடலை வேறு யாரும் பார்க்க முடியாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்று தத்துவம் பேசி போட்டோவை தரமான சம்பவமாக மாற்றி இருக்கிறார். அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் என்று போட்டோக்கு லைக்குகளை அள்ளிவிட்டு வருகின்றனர்.