ரெடி ஸ்டார்ட்…! எடப்பாடியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடியார்…!
சேலம்: எடப்பாடி தொகுதியில் இருந்து தமது தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்கி உள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
தமிழக அரசியல் களத்தின் முக்கிய கட்டமாக பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமது தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்கி இருக்கிறார். தமது எடப்பாடி தொகுதியில் பெரிய சோரகையில் உள்ள சென்றாயபெருமாள் கோயிலில் இருந்து சாமி கும்பிட்டுவிட்டு அவர் தமது தேர்தல் பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளார்.
மார்கழி மாதமான சனிக்கிழமை பஞ்சமி திதியான இன்று தமது பிரச்சாரத்தை தொடங்கிய அவர், மாநிலம் முழுக்க பயணிக்க தீவிர சுற்றுப் பயணம் செய்ய இருக்கிறார்.