Sunday, May 04 12:27 pm

Breaking News

Trending News :

no image

இன்றைய TOP 10 News…!


தேசிய அளவிலும், தமிழகத்திலும் இன்றைய தினத்தின் TOP 10 செய்திகளை  பார்க்கலாம்:

பொய்களை பரப்புவதற்கான உத்தரவாதத்தை தான் பிரதமர் மோடி அளித்துள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறி உள்ளார்.

விவசாயிகள் போராட்டம் எதிரொலியாக உத்தரப்பிரதேசத்தில் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா பகுதியில் அம்மாநில அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 19 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம், கடலோர மாவட்டங்களில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரள அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் தான் அம்மாநிலத்தில் சபரிமலை ரயில் திட்டங்கள் தாமதம் ஆவதாக மக்களவையில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறி உள்ளார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 3 நாட்கள் நடைபெறும் பன்னாட்டு கணினி தமிழ் மாநாடு இன்று தொடங்குகிறது.

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.

உதகை அருகே வீடு கட்டும்போது மண் சரிந்து விழுந்ததில் சிக்கிய 6 பெண்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

628வது நாளாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் எவ்வித மாற்றமும் இன்றி 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

சட்டம் ஒழுங்கு சீர்கேடு, வன்முறை மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்று பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது.

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் 2வது அரையிறுதி ஆட்டத்தில் இன்று ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

Most Popular