சசிகலா அதிமுகவில் சேர்ப்பா..? அமைச்சர் சொன்ன அட்டகாச பதில்
மதுரை: சசிகலா அதிமுகவில் சேர்க்கப்படுவாரா என்பது தெரியாது, நான் ஒரு சாதாரண தொண்டன் என்று கூறி இருக்கிறார் அமைச்சர் உதயகுமார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா வரும் ஜனவரியில் விடுதலையாகிறார். அது தொடர்பான விவரங்களை ஆர்டிஐ மூலம் பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, அதிமுகவில் சசிகலா சேர்த்துக் கொள்ளப்படுவரா, அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி பேச்சுகள் எழுந்துள்ளன. ஆளுங்கட்சி அமைச்சர்கள் அனைவரும் ஒரே குரலில் சசிகலா பற்றி கேள்வி கேட்டால் மழுப்பி விடுகின்றனர்.
அதில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் வருவாய்துறை அமைச்சர் உதயகுமார். வரும் சட்டசபை தேர்தலுக்குள் அதிமுக, அமமுக இணைப்பு உறுதி என்று ஒருபக்கம் தகவல்கள் கசியவிடப்பட்டுள்ளன.
இந் நிலையில், சசிகலா அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்படுவாரா என்பது தமக்கு தெரியாது என்று அவர் கூறியுள்ளார். அதிமுகவில் நான் ஒரு சாதாரண தொண்டன் என்றும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்து இருக்கிறார்.