Sunday, May 04 12:49 pm

Breaking News

Trending News :

no image

4 மாசம் தான்.. சும்மா அதிர வச்சுட்டோம்…! மோடியை மிரள வைத்த ஸ்டாலின்


சென்னை: ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை வெறும்  நான்கே மாதத்தில் செய்திருக்கிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறி இருக்கிறார்.

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடர் சென்னையில் இன்று தொடங்கியது. நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற துவக்க நாள் விழாவில், பிரதமர் மோடி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இந்த ஒலிம்பியாட் செஸ் தொடரை தமிழகத்தில் நடத்துவது மிகவும் பெருமை. நேரு விளையாட்டு அரங்கத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் வகையில் இந்த விழா நடந்துள்ளது.

விழாவுக்காக பிரதமர் மோடியை டெல்லி சென்று நேரில் அழைக்கலாம் என்று எண்ணி இருந்தேன். ஆனால் கொரோனா தொற்றின் காரணமாக செல்ல இயலாத சூழல் அமைந்துவிட்டது. அப்போது பிரதமர் மோடி நீங்கள் ஓய்வெடுத்து கொள்ளுங்கள், நான் கட்டாயம் வந்துவிடுகிறேன் என்று கூறினார்.

நாட்டுக்கே பெருமை தரும் என்பதால் பிரதமர் தொடங்கி வைக்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்ய 18 மாதங்கள் பிடிக்கும்.

ஆனால் நாங்கள் நான்கே மாதங்களில் செய்து முடித்துவிட்டோம். தமிழகம் இந்தியாவின் செஸ் தலைநகரமாக இருக்கிறது  என்று பேசினார்.

Most Popular