24 மணி நேரம்… 230 பேர்…! மிரட்டும் கொரோனா… மாஸ்க் எடுங்க
திருவனந்தபுரம்: கொரோனா மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பது பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி வருகிறது.
உலகமே நினைத்தாலும் மறக்க முடியாத விஷயம் கொரோனா. ஒரே ஒருவர்.. வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்தார்.. அவ்வளவுதான்… நாடு முழுவதும் பரவி மக்களை பலி வாங்கியது.
லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க, பலர் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீளமுடியாமல் இருப்பதாக கூறுவதுண்டு. இப்பவும் சிங்கப்பூரை கொரோனா விடுவதாக இல்லை. தற்போதுள்ள கணக்கு படி 10 ஆயிரம் பேருக்கு அந்நாட்டில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா ஆட்டத்தை ஆரம்பித்து இருக்கிறது. வெகு வேகமாக கொரோனா பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டுமே 230 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
தற்போதுள்ள தகவல் படி ஒட்டு மொத்தமாக 949 பேர் கொரோனா பிடியில் உள்ளனர். நாட்கள் நகர, நகர கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை கேரளாவில் உயர்ந்து வருவது பெரும் கவலையையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
பல மாதங்களாக கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்றும் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துவிடுமோ என்ற அச்சம் இருக்கும் நிலையில், பொது இடங்களுக்கு செல்வோர் முகக்கவசம் அணிந்து செல்லவேண்டும் என்று அறிவுறுத்தல் தொடங்கி இருக்கின்றன.
சபரிமலைக்கு நாள் ஒன்றுக்கு ஒன்றே கால் பக்தர்கள் தரிசனத்துக்காக வெயிட்டிங்கில் உள்ளனர். 12 மணிநேரம் கூட்ட நெரிசல் இருக்க… கொரோனா எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகிவிட்டது.