திமுக உங்கப்பன் வீட்டு கட்சியா…? அசால்ட் காட்டிய ஆளுநர் தமிழிசை
மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி தருவது தொடர்பாக அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு பதிலடி தந்திருக்கிறார் ஆளுநர் தமிழிசை.
சென்னை வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டுவிட்டது என்றாலும், அதன் தாக்கத்தில் இருந்து இருந்து விடுபடவில்லை. உடைமைகள், இருப்பிடத்தை இழந்து தவித்து வரும் மக்களுக்கு வேண்டிய உதவிகளை அரசியல் பாரபட்சம் இன்றி தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
ஆனாலும், நிவாரண நடவடிக்கை போதவில்லை, சரியில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ள பாதிப்பு இழப்பீடாக கேட்ட தொகை பற்றிய விவாதங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், மத்திய அரசு விடுவித்த தொகை பற்றி கருத்து மோதல்கள் எழுந்துள்ளன.
ஒரு கட்டத்தில் நிவாரண நிதி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், என்ன… உங்கப்பன் வீட்டு சொத்தையா கேட்குகிறோம்? தமிழகம் அளித்த பல்லாயிரம் கோடி ரூபாய் வரி பணத்தில் இருந்து தானே கேட்கிறோம் என்று பொங்கி தள்ளினார்.
அவரின் பேச்சு திமுக மத்தியில் மட்டுமல்லாது மற்ற அரசியல் கட்சிகளிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நிலைமை இப்படி இருக்க, உதயநிதிக்கு பதிலடி தந்திருக்கிறார் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.
அவர் பேட்டி ஒன்றில் கூறியதாவது;
அவங்க அப்பா பதவியை, அவங்க அப்பன் வைத்துக் கொண்டிருக்கிற பதவியை அனுபவித்துக் கொண்டு இருப்பவர்(உதயநிதி) அப்படித்தான் பேசுவார்.
சாதாரண திமுக தொண்டன் கேட்கலாமா? இந்த கட்சி உங்கப்பன் வீட்டு கட்சி மட்டும்தானா? இந்த பதவி உங்களுக்கு மட்டும்தானா அப்படின்னு கேட்கலாமா?
கலைஞர் உரிமை தொகைன்னு தர்றீங்க? இதை உங்க வீட்டுல இருந்தா எடுத்து தர்றீங்கன்னு நாங்க கேக்கலாமே? உதயநிதி வார்த்தைகளை அடக்கவில்லை என்றால் அவர் ஒரு எதிர்மறை தலைவராக தான் இந்தியா முழுவதும் பார்க்கப்படுவார் என்று கூறி உள்ளார்.