Sunday, May 04 11:58 am

Breaking News

Trending News :

no image

#NatchathiramNagargiradhu பா. ரஞ்சித் சொன்ன புது அப்டேட்….!


சென்னை: நட்சத்திரம் நகர்கிறது படம் பற்றிய புதிய தகவல் ஒன்றை அதன் இயக்குநர் பா. இரஞ்சித் வெளியிட்டு உள்ளார்.

ஆர்யாவை கதாநாயகனாக வைத்து சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கிய பா இரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை டைரக்ட் செய்துள்ளார். இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் கதாநாயகன். முழுக்க முழுக்க காதல் படமாக இரஞ்சித் படம் பிடித்துள்ளார்.

யாழி பிலிம்ஸ், நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. வரும் 31ம் தேதி இந்த படம் தியேட்டர்களில் ரிலீசாகிறது. அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டு விட்டது.

ஆனால், படம் பற்றியோ அதன் அடுத்தக்கட்ட தகவல்கள் குறித்தோ எந்த விவரமும் வெளியாகவில்லை. இந் நிலையில் ஒரு புது அறிவிப்பை பா.இரஞ்சித் வெளியிட்டு உள்ளார்.

அதாவது படத்தின் டிரெய்லர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தமது டுவிட்டர் பதிவில் அவர் அறிவித்துள்ளார். ஏற்கனவே படம் பற்றிய எதிர்பார்ப்பு உள்ள நிலையில் டிரெய்லர் அறிவிப்பு மேலும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

Most Popular