Sunday, May 04 12:00 pm

Breaking News

Trending News :

no image

ஒட்டிட்டு போகும் பாஜக… பின்னாடியே அழிச்சிட்டு போகும் தபெதிக…!


சென்னை: சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போஸ்டரில் பிரதமர் மோடி போட்டோவை பாஜகவினர் ஒட்டிக் கொண்டு செல்ல… பின்னாடியே அதன் மீது கருப்பு மை பூசி தபெதிக அழித்து வருகிறது.

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை சென்னை மாமல்லபுரத்தில் நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகளினால் மாமல்லபுரம் களை கட்டி உள்ளது. தமிழக அரசின் பிரமாதமான ஏற்பாடுகளினால் விளையாட்டு ஆர்வலர்கள் படு உற்சாகத்தில் இருக்கின்றனர்.

தலைநகர் சென்னையில் எங்கு திரும்பி பார்த்தாலும் செஸ் ஒலிம்பியாட் பற்றிய பேச்சுகள், விளம்பரங்கள், போஸ்டர்கள் தான். இப்படிப்பட்ட சூழலில் பிரதமர் மோடி படம் ஏன் போஸ்டர்களில் இல்லை என்று கூறி போஸ்டர் அரசியலில் பாஜக இறங்கி உள்ளது.

அக்கட்சியை சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி பிரதமர் மோடி போட்டோவை போஸ்டர்களில் தனி ஆவர்த்தனம் என்ற பெயரில் ஒட்டி வருகின்றனர். அவர்கள் ஒட்டி சென்றுவிட்டு போன பின்னர் அதே இடத்துக்கு தபெதிகவினர் வருகின்றனர்.

கையில் கருப்பு மை அடங்கிய ஸ்பிரேவை அடித்து, பிரதமர் மோடி போட்டோவை அழிக்கின்றனர். அங்கே பாஜகவினர் மோடி போட்டோவை ஒட்டி வர, இங்கே தபெதிகவினர் அதை அழித்து வருகின்றனர்.

இந்த ஏட்டிக்கு போட்டி என்ற பாஜகவின் அரசியலை காணும் பொதுமக்கள் இருக்கும் கொஞ்ச நஞ்ச பேரும் தமிழ்நாட்டுல பாஜககாரங்க இப்படி போஸ்டர் ஒட்டி இல்லாம பண்ணிடுவாங்க போல என்று புலம்பியபடியே செல்கின்றனர்.

Most Popular