Sunday, May 04 12:55 pm

Breaking News

Trending News :

no image

மருந்தே இல்லை… மனித குலத்தை அச்சுறுத்த வரும் நோரோ…! ‘ஷாக்’ தகவல்


லண்டன்: கொரோனா நிலவரமே தணியாத நிலையில் நோரோ வைரஸ் தொற்று இங்கிலாந்தில் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலக நாடுகள் இன்னமும் கொரோனாவின் கோர பிடியில் இருந்து வெளிவரவில்லை. கொரோனா வைரஸ் மட்டுமல்லாது மஞ்சள் வைரஸ், டெல்டா வைரஸ், கறுப்பு, பச்சை, மஞ்சள் பூஞ்சை என மனித குலத்தை அச்சுறுத்தி வருகிறது.

நிலைமை இப்படியாக இருக்க இப்போது நோரோ என்னும் வைரஸ் பரவி வருகிறது. இதை இங்கிலாந்து சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த வைரசானது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவக்கூடியது.

உணவு நஞ்சாதல் எனப்படும் புட் பாய்சனிங் மூலம் இந்த வைரஸ் அறியப்படுகிறது. இந்த வைரசானது உணவுக்குடலை ஒரு வழி பண்ணிவிடும். வயிற்று போக்கு, உடம்பு மற்றும் தசைவலி போன்றவை இதன் அறிகுறிகள்.

நோரோ வைரஸ் ஒரு மனிதனை தாக்கிவிட்டால் 12 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை அறிகுறிகள் வெளிப்படும். 3 நாட்கள் வரை இந்த அறிகுறிகள் தென்பட்டு கொண்டே இருக்கும்.

சரி… எப்படி இந்த வைரஸ் பரவுகிறது தெரியுமா..? சுகாதாரமில்லாத உணவு மற்றும் தண்ணீர், அசுத்தமான சுற்றுப்புறம் மூலம் இந்த வைரஸ் மற்றவர்களுக்கு பரவுகிறது. வைரஸ் தாக்கியுள்ள நபருடன் உணவு பகிர்ந்து கொண்டாலே போதும்…. நோரோ வைரஸ் அட்டாக் பண்ணிவிடும்.

இந்த வைரசுக்கு தடுப்பூசி இல்லை. கொரோனா தொற்றின் போது நாம் என்ன வழிமுறைகள், சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்றினோமோ அதையே பின்பற்றினால் போதும்… வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பித்து கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.

Most Popular