#VijayakanthDeath வரமுடியலையே…. பிரபல இயக்குநர் கண்ணீர்
நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு தன்னால் வரமுடியவில்லையே என்று இயக்குநர் ஆர்கே செல்வமணி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு உள்ளார்.
மறைந்துவிட்ட விஜயகாந்தின் உடலுக்கு ஆயிரக்கணக்கான திரையுலகத்தினர், பொதுமக்கள் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அவரின் இழப்பு பேரிழப்பு என்றாலும் நேரில் வரமுடியவில்லை என்று பலரும் வீடியோவில் இரங்கல் கூறி வருகின்றனர். அந்த வகையில் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் படத்தை இயக்கிய ஆர்கே செல்வமணி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு உள்ளார்.
விஜயகாந்த் ஊர்வலம் செல்லும் பாதையில் உள்ள பிரபல மருத்துவமனையில் உடல்நலம் இல்லாமல் தாம் படுத்துக் கிடப்பதாக அவர் வீடியோவில் கூறி இருக்கிறார்.
அவரின் முழு வீடியோ இதே செய்தியின் கீழே இணைக்கப்பட்டு உள்ளது.