எம்பிபிஎஸ் கலந்தாய்வை பதம் பார்த்த நிவர்….! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
சென்னை: நிவர் புயல் காரணமாக இன்று நடைபெற இருந்த மருத்துவப் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. மருத்துவ படிப்புகளுக்கான இந்த கலந்தாய்வு டிசம்பர் 4ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கிட்டத்தட்ட 4 ஆயிரத்து 944 இடங்களுக்கு, 5 ஆயிரத்து 441 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இந்நிலையில் நிவர் புயல் எதிரொலியாக, இன்று நடைபெறவிருந்த மருத்துவ கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மருத்துவ கலந்தாய்வு திங்கட்கிழமை அன்று நடைபெறும் வகையில் அட்டவணையில் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.