ரீ என்ட்ரியாகும் வடிவேலு…! அந்த லெவல் பாருங்க… அதுதான் வேற…!
சென்னை: ஓடிடி தளத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக நடிகர் வடிவேலு மீண்டும் ரி என்ட்ரியாகிறார் என்ற தகவல் அவரது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி இருக்கிறது.
தமிழ் சினிமாவின் ஆக சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வடிவேலு. அவரின் பாடி லாங்குவேஜ் , டயலாக் டெலிவரி தான் இன்றும் மீம்ஸ் க்ரியேட்டர்களின் ஆதர்ஷ கதாபாத்திரங்களுக்கு காரணமாக உள்ளது.
அரசியல் சுழலில் சிக்கி ஒரு கட்டத்தில் ஒட்டு மொத்த சினிமா வாய்ப்பையும் இழந்தார். 10 வருஷமாக லாக் டவுனில் இருக்கிறேன் என்று நிகழ்ச்சி ஒன்றில் அவர் கண்கலங்கிய சம்பவமும் நடந்தது.
இப்போது அவர் மீண்டும் ரீ என்டரியாகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இம்முறை அவர் சினிமாவில் என்ட்ரியாகவில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பணியில் ஈடுபடுகிறார்.
அதாவது ஆஹா என்ற ஒடிடி தளம் தெலுங்கில் பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. இந்த தளம் இப்போது தமிழிலும் கால் பதிக்க நினைக்கிறது. அதற்காக முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்த ஓடிடி தளத்தில் ஒரு காமெடி நிகழ்ச்சி வர இருக்கிறதாம்… அதை தொகுத்து வழங்க உள்ளாராம் வடிவேலு. அதற்காக அவரிடம் பேச்சுவார்த்தையும் நடந்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
நடிப்பையும் தாண்டி தமது அக்மார்க் காமெடி முத்திரையை வலுவாக இந்த நிகழ்ச்சியில் கொண்டு வர வடிவேலு முடிவெடுத்துள்ளாராம். ஆக மொத்தத்தில் வடிவேலு ரசிகர்களுக்கு சூப்பர் தகவல் காத்து கொண்டிருக்கிறது என்பது மட்டும் நிதர்சனம்…!