Sunday, May 04 01:07 pm

Breaking News

Trending News :

no image

அப்போ கருப்பு.. வெள்ளை… இப்போ மஞ்சள் பூஞ்சை தொற்றாம்…! அட போங்கப்பா…!


டெல்லி: மஞ்சள் பூஞ்சை தொற்று உடலில் இருக்கும் உறுப்புகளை செயலிழக்க வைக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை பூஞ்சை நோய் தொற்று கடுமையாக தாக்கி வருகிறது. கிட்டத்தட்ட 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு இந்த தொற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கருப்பு பூஞ்சை என்பது ஒரு பக்கம் இருக்க… அப்படியே பீகார் மாநிலத்தில் 4 பேருக்கு வெள்ளை பூஞ்சை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இப்படி கருப்பு, வெள்ளை பூஞ்சை என்பது மாறி இப்போது மஞ்சள் பூஞ்சை தொற்று உருவாகி இருக்கிறதாம்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒருவருக்கு மஞ்சள் பூஞ்சை நோய் தொற்று ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மஞ்சள் பூஞ்சை கருப்பு, வெள்ளை போன்று கிடையாதாம். உடலுக்குள்ளே இருந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, உடல் உறுப்புகளை செயலிழக்க வைத்துவிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

உடல் சோம்பல், அசதி, பசியின்மை, எடை குறைந்து போதல், கண்கள் கீழ் கருவளையங்கள் போன்றவை மஞ்சள் பூஞ்சை தொற்றின் அறிகுறிகள் என்று அவர்கள் கூறுகின்றனர். கொரோனா தொற்றுக்கே இன்னமும் மக்கள் அல்லாடி வரும் நிலையில் பூஞ்சை தொற்று இப்படி ரகம் ரகமாக தாக்கி வருவது பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.

Most Popular