நம்ப முடியல…! வண்டலூர் சிங்கங்களுக்கு இப்படி ஒரு சோதனையா…?
சென்னை: வண்டலூர் பூங்காவில் உள்ள சிங்கங்களையும் கொரோனா தொற்று விடவில்லை. மொத்தம் 9 சிங்கங்களுக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகி இருக்கிறது.
கொரோனா தொற்று காரணமாக இப்போது தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஊரடங்கால் ஓரளவு கொரோனா தொற்று பாதிப்பு குறைய ஆரம்பித்துள்ளது, ஓரளவு ஆறுதலாக உள்ளது.
ஆனாலும் தொற்றின் பாதிப்பின் முழுமையாக குறையவேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் இங்கு மனிதர்களை மட்டுமே தாக்கி வந்த கொரோனா, இப்போது சிங்கங்களையும் விட்டு வைக்கவில்லை.
சென்னையை அடுத்துள்ள வண்டலூர் பூங்காவில் உள்ள 9 சிங்கங்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என்பது உறுதியாகி இருக்கிறது. மனிதர்களுக்கு பரவி வந்த கொரோனா இப்போது விலங்களுக்கும் பரவி இருக்கிறது.
கடந்த சில நாட்களாக அங்குள்ள சிங்கங்கள் சரியாக சாப்பிடாமல், சளி தொந்தரவுடன் இருப்பதை பராமரிப்பாளர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து, அதன் சளி மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. சிங்கங்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என்பதை பூங்கா நிர்வாகமும் உறுதிப்படுத்தி உள்ளது. ஆனால் சிங்கங்களுக்கு எப்படி கொரோனா தொற்று ஏற்பட்டது என்று அனைவரும் குழம்பி போய் இருக்கின்றனர்.