தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி காலமானார்…!
திருவனந்தபுரம்; வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவால் தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி காலமானார். அவருக்கு வயது 97.
கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கேரளாவை சேர்ந்த அவர், உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை கொண்டவர். இது தவிர சிறுபான்மையின முதல் பெண் நீதிபதி என்றும் பெருமை பெற்றவர்.
தமிழக ஆளுநராக 1997ம் ஆண்டு ஜனவரி 25 முதல் 2001ம் ஆண்டு ஜூலை 1 வரை பதவி வகித்தவர். கருணாநிதி கைது சம்பவத்தால் பெரும் சர்ச்சையில் சிக்கிய அவர், மத்திய அரசால் ஆளுநர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.