Sunday, May 04 12:18 pm

Breaking News

Trending News :

no image

மூக்கில் வழியும் ரத்தம்… காய்ச்சல்…! இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புது ‘நோய்’…!


டெல்லி: இப்போது இருப்பதை விட பயங்கரமாக பச்சை பூஞ்சை நோய்க்கு இந்தியாவில் முதல் முதலாக ஒருவர் பாதித்து இருப்பது, மருத்துவ உலகை அதிர வைத்துள்ளது.

நாட்டில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. அது ஆறுதல் அளிக்கும் செய்தியாக இருந்தாலும், சிகிச்சைக்கு பிந்தைய பாதிப்புகள் என்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.

கருப்பு, வெள்ளை, வெள்ளை பூஞ்சை நோய்கள் மனிதனை பாடாய்படுத்துகிறது. இப்போது அதற்கு எல்லாம் மேலாக புதிய பூஞ்சை தொற்று ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பச்சை பூஞ்சை தொற்று என்ற புதிய வகை தொற்று இந்தியாவில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

மத்தியபிரதேச மாநிலத்தில் ஒருவருக்கு இந்த தொற்று இருப்பதை மருத்துவ உலகம் கண்டறிந்து உள்ளது. இந்தூரை சேர்ந்த அவருக்கு வயது 34. கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்துவிட்டாலும் இப்போது பச்சை பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

கொரோனா காரணமாக அவரது நுரையீரல் 990 சதவீதம் பாதிக்கப்பட்டு இருந்தது. இப்போது பச்சை பூஞ்சை தாக்கி உள்ளதால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

பச்சை பூஞ்சையின் அறிகுறிகள் சற்றே அதிர்ச்சி அளிக்கும் ரகமாக இருக்கிறது. இந்த பூஞ்சை தாக்கினால் மூக்கு வழியாக ரத்தம் வரும். பின்னர் அதிக காய்ச்சல் வந்து மனிதனை பாடாய்படுத்தும் என்று மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. நாட்டிலேயே பச்சை பூஞ்சை தாக்குதலுக்கு ஆளான முதல் நபர் என்பதால் மருத்துவ உலகம் அதிர்ச்சியில் இருக்கிறது.

Most Popular