பத்மஜா போயி….! சேட்டா…! செம சூப்பர்
அரசியல் கூட்டங்கள் என்றால் அனல் பறக்கும். அதிலும் தேசிய அளவிலான தலைவர்கள் பங்கேற்றால் சொல்லவே வேண்டாம். அவர்கள் ஆங்கிலம் அல்லது இந்தி என ஏதாவது ஒன்றில் தான் மேடைகளில் நரம்பு தெறிக்க பேசுவார்கள்.
அப்படி நடக்கும் கூட்டங்களில் அவர்கள் பேசுவதை உள்ளூர் அல்லது அந்த தரப்பு மாநில மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக மொழி பெயர்ப்பதும் உண்டு. அதற்காக மேடையில் ஒரு பக்கம் மொழி பெயர்ப்பாளர்கள் வரிக்கு வரி பேசி மக்களிடம் அரசியல் தலைவர்கள் பேச்சை கொண்டு சேர்ப்பது வழக்கம்.
தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் தமிழகத்தில் பேசும் போது அதை தப்புத்தப்பாக அந்த கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் மொழி பெயர்த்து கிண்டலுக்கு ஆளானது உண்டு… இது தொடர்பான memes வேற ரகம்.
ஆனால் இதுபோன்ற அனைத்து வீடியோக்களை தூக்கி சாப்பிட்டு இருக்கிறது ஒரு வீடியோ. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சிறந்த பேச்சாளருமான பிருந்தா காரத் கூட்டம் ஒன்றில் பங்கேற்றார்.
அதில் காரசாரமாக அரசியல் பற்றி அனைவரையும் சுறுசுறுப்பாக்கினார். அவரின் பேச்சு அட்டகாசமான ஆங்கிலத்தில் இருந்தது. அவரை பேச்சை உள்ளூர் மக்கள் புரிந்து கொள்ளும் வண்ணம், மொழி பெயர்ப்பாளர் ஒருவர் மலையாளத்தில் மொழி பெயர்த்த படி இருந்தார்.
கேரளாவில் முன்னாள் முதலமைச்சர், காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளருமான மறைந்த கருணாகரன் மகள் பத்மஜா வேணுகோபால் பாஜகவில் அண்மையில் சேர்ந்துள்ளார் என்று பேசி இருக்கிறார். நீட்டி, முழக்கி, தெளிவாக அழகு ஆங்கிலத்தில் இந்த விஷயத்தை அவர் பகிர்ந்தார்.
ஸ்டைலான கிட்டத்தட்ட ஒரு para அளவுக்கு பிருந்தா காரத் பேச்சு இருக்க… அனைத்தையும் உள்வாங்கி கொண்டு பத்மஜா போயி…! என்று மொழி பெயர்த்து போட்டு தாக்கி இருக்கிறார் அந்த மொழி பெயர்ப்பாளர்.
அவரின் மொழி பெயர்ப்பை கேட்டு ஆச்சரியம் அடைந்த பிருந்தா காரத், அவ்வளவுதானா? என்று வினவ, அவ்வளவுதான் அடுத்து பேசுங்க என்று கூறி உள்ளார். இந்த காட்சியை மேடையின் கீழே இருந்த தொண்டர் அழகாக வீடியோ எடுக்க… இப்போது இணையத்தில் இதுதான் சக்கை போடு போடும் வீடியோவாக மாறி இருக்கிறது.
கேரளா என்றால் சுறுசுறுப்பு, smart என்றாலும் இந்த சேட்டனின் ஒரே பதில், பார்ப்போரை அசர வைத்துள்ளது.அந்த கலக்கல் வீடியோ செய்தியின் கீழே இணைக்கப்பட்டு உள்ளது.