Sunday, May 04 12:49 pm

Breaking News

Trending News :

no image

ராத்திரியில் கேமிராவுடன் ‘அந்த’ பிசினஸ்…! பிரபல நடிகையின் கணவர் திடீர் கைது


மும்பை: பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச படம் தயாரித்ததாக கைது செய்யப்பட்டு உள்ளார்.

பிரபு தேவாவுடன் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்தவர் ஷில்பா ஷெட்டி. பாலிவுட் நடிகையான இவரது கணவர் ராஜ் குந்த்ரா. மிக பெரும் தொழிலதிபர். லண்டனை சேர்ந்தவர்.

இவரைத் தான் மும்பை போலீசார் நேற்றிரவு அதிரடியாக கைது செய்துள்ளனர். காரணத்தை கேட்டால் கண்றாவி என்று கூறும் அளவுக்கு உள்ளதாம். அதாவது, ஆபாச படம் தயாரித்து அவற்றை மொபைல் ஆப்களில் அப்லோட் செய்து காசு பார்த்துள்ளார்.

அவர் செய்த அனைத்து காரியங்களுக்கான பக்கா ஆதாரங்கள் மும்பை போலீசுக்கு கிடைத்துள்ளன. இது குறித்து விசாரணைக்கு ஆஜராகுமாறு ராஜ் குந்த்ராவை போலீசார் அழைத்திருந்தனர்.

அவரும் போலீஸ் நிலையத்துக்கு சென்றிருக்கிறார். ராஜ் குந்த்ராவிடம் விசாரணை நடத்திய அவர்கள் அப்படியே அலேக்காக கைது செய்து உள்ளே வைத்துவிட்டனர். பந்தாவாக போலீசிடம் போன அவர், எதிர்பாராத இந்த நடவடிக்கையின் காரணமாக அதிர்ந்து போய்விட்டார்.

கைது நடவடிக்கை குறித்து மும்பை போலீசார் பக்காவாக ஒரு அறிக்கையும் வெளியிட்டு விட்டனர். ஆபாச படங்கள் தயாரித்தாக ராஜ் குந்த்ராவுக்கு எதிரான ஆதாரங்கள் உள்ளன. ஆகையால் அவரை கைது செய்துள்ளோம். ஆபாச படங்களை அவர் மொபைல் போன் ஆப்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இது குறித்து அவரிடம் விரிவான விசாரணை நடத்தி வருகிறோம் என்று காவல்துறை தெரிவித்து இருக்கிறது.

நாடறிந்த ஒரு பிரபல நடிகையின் கணவர், ஆபாச பட வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை வரவழைத்து இருக்கிறது. மும்பை போலீசின் இந்த நடவடிக்கைக்கு பெரும் வரவேற்பும் கிடைத்திருக்கிறது.

Most Popular