Sunday, May 04 12:36 pm

Breaking News

Trending News :

no image

அரசியலில் அஜித் எண்ட்ரியா….? ‘தல’ சுத்துது


அல்டிமேட் ஸ்டார், தல, இப்போது ஏகே என்றழைக்கப்படும் நடிகர் அஜித்குமார் அரசியலில் நுழைவதாக கூறி உள்ளதாக பிரபல இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் வெளியிட்டு உள்ள பதிவு பெரும் குழப்பமாகி இருக்கிறது.

நேரம் படம் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன். அவரின் பிரேமம் படம் தமிழக ரசிகர்களை பைத்தியம் பிடிக்க வைத்தது. காட்சி அமைப்புகள், கதாபாத்திரங்கள், பாடல்கள் என படம் சூப்பர் ஹிட்.

தற்போது அவர் கிப்ட் என்னும் படத்தை டைரக்ட் செய்து வருகிறார். விஜயகாந்த் மரணம் தமிழக சினிமாவை உலுக்கி எடுத்து வரும் நிலையில் அதற்கு ஈடு கொடுக்கும் வண்ணம் ஒரு பதிவை போட்டு அனைவரின் தூக்கத்தையும் கெடுத்து வைத்திருக்கிறார்.

 அது… நடிகர் அஜித் குமார் அரசியலுக்கு என்ட்ரி ஆகிறார் என்று தான். அந்த பதிவில் அவர் கூறியது தான் சூப்பர் ஜோக்… நிவின் பாலி(நேரம், பிரேமம் பட கதாநாயகன்)சுரேஷ் சந்திராவும்(அஜித் மேனேஜர்) இருவரும் நீங்கள் அரசியலுக்கு வர இருப்பதாக கூறி உள்ளனர்.

இது நடந்தது பிரேமம் படத்தில் நிவின் பாலி நடிப்பை கண்டு மகள் அனோஷ்கா ஆச்சரியம் அடைந்த தருணம். நீங்கள் நிவின் பாலியை வீட்டுக்கு அழைத்த போது நடந்த சம்பவம்.

ஆனால் அதன் பின்னர் உங்களை(அஜித்) எந்த பொது நிகழ்ச்சியிலும் பார்க்க முடியவில்லை. அப்படி என்றால் என்னிடம் அவர்கள் பொய் கூறி இருக்கின்றனர், இல்லை என்றால் கடிதம் மூலம் எனக்கு தெரியப்படுத்துங்கள் என்று கூறி இருக்கிறார்.

அரசியலுக்கு தமக்கும் எவ்வளவு தூரம் இடைவெளி இருக்கிறதோ, அதை விட பன்மடங்கு தூரத்தில் நின்று வேடிக்கை பார்ப்பவர் அஜித் குமார். இதை அவரே பலதடவை கூறி இருக்கிறார்.

எந்த நிகழ்ச்சிகளிலும் அவ்வளவு எளிதில் அஜித்தை பார்க்க முடியாது, அப்படிப்பட்ட அவரா அரசியலில் நுழைகிறார், இதெல்லாம் சுத்த பொய் என்கின்றனர் ரசிகர்களும், அவரை நன்கு அறிந்தவர்களும்.

ஆனால் அல்போன்ஸ் ரசிகர்கள் கூற்றே வேறு… அவர் மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளார், அதற்கான சிகிச்சையிலும் உள்ளார், மருத்துவ சிகிச்சை அவசியம் என்று கூறி அனைத்தையும் மறுக்கின்றனர்.

Most Popular