‘பிச்சை’ குஷ்பு…! பெண்கள் காறி துப்பலாம்
சென்னை: எப்போதாவது வாய் கொழுப்பு எடுத்து சிலர் பேசுவது உண்டு. ஆனால் எப்போதும் இப்படி கேவலப்படுத்தி, சர்ச்சையான வார்த்தைகளை பேசினால் எப்படி இருக்கும்?
அப்படி தான் இருக்கிறது நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்பு பேசிய பேச்சு. அவர் இம்முறை பேசியிருப்பது மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாயை பற்றி. இந்த தொகையை தமிழக அரசு மகளிருக்கு பிச்சையாக போடுகிறது என்று பேசி வம்புக்கு பிள்ளையார்சுழி போட்டு இருக்கிறார்.
சென்னையை அடுத்த செங்குன்றத்தில பாஜக ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது தான் இந்த பொன்மொழிகளை உதிர்த்து இருக்கிறார். அவர் கூறியதாவது:
தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதற்கு முதலமைச்சர் என்ன பதில் கூற போகிறார்? மகளிருக்கு தாய்மார்களுக்கு 1000 ரூபாய் பிச்சை போட்டால், அவர்கள் திமுகவுக்கு வாக்களிப்பார்களா? என்று பேசி இருக்கிறார்.
நடிகை குஷ்புவின் இந்த வாய்க்கொழுப்பு பேச்சு, திமுகவினரையும், பெண்களையும் கோபத்துக்கு ஆளாக்கி உள்ளது. ஆளாளுக்கு சமூகவலை தளங்களில் குஷ்புவை பொளந்து வருகின்றனர். ஆனால் இதை எல்லாம் அப்படிக்கா… ஓரமாக இடது கையால் ஹேண்டில் பண்ணுவது போல ஒரு பதிவை வெளியிட்டு அதகளமாக்கி இருக்கிறார் குஷ்பு.
அவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது:
1982ம் ஆண்டு எம்ஜிஆர் ஏழைகளுக்கு வழங்கிய உணவை பிச்சை என்று முரசொலி மாறன் விமர்சித்தார். இப்போது கண்டிப்பவர்கள் அதை கண்டு கொள்ளவில்லையே? ஓசியில் கொடுப்பதால் பெண்கள் பேருந்துகளில் பயணிக்கிறார் என்று பொன்முடி சொன்னாரே?
அப்போது அனைவரும் குருடர்களாக, காது கேளாதவர்களாக இருந்தீர்களா? போதை பொருள் நடமாட்டத்தை நிறத்துங்கள், டாஸ்மாக்குக்கு செலவழிக்கும் பணத்தை பெண்கள் சேமிக்க உதவுங்கள். 1000 ரூபாய் பணம் அவர்களுக்கு தேவையில்லை.
கண்ணியமாக வசதியாக குடும்பம் நடத்தும் அளவுக்கு அவர்கள் சேமிப்பார்கள். அடுத்த 14 தலைமுறைக்கு உங்களுக்கு பணம் தேவைப்படுகிறது என்று நினைக்கிறேன். பொய் பிரச்சாரம் செய்வதை தொடருங்கள், நீங்கள் தோல்வி அடைந்துவிட்டீர்கள் என்பதற்கு அதுவே உதாரணம் என்று கூறி இருக்கிறார். அவரின் இந்த கருத்தை பார்த்த பெண்கள் பலரும் காறி உமிழாத குறையாக இணையத்தில் போட்டு தாளித்து வருகின்றனர்.
என்னதான் மாற்று கருத்து அல்லது எதிர் கருத்து என்று இருந்தாலும் பிச்சை என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்க வேண்டாமே? என்பது தான் அனைவரின் கருத்தாக இருக்கிறது.