#UdhayanidhiStalin ஊர்சுத்தி பாக்க வந்தேனா..? தெறிக்க வைத்த கோபம்
தூத்துக்குடி: ஊர் சுத்தியா பாக்க வந்தேன் என்று செய்தியாளர்களிடம் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி தந்துள்ளார்.
வரலாற்றில் இனி இப்பேர்ப்பட்ட வெள்ள பாதிப்பை தென் மாவட்டம் சந்தித்தது இல்லை. எங்கும் மழை, வெள்ள நீர் தேங்கி தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல பகுதிகளை புரட்டி போட்டிருக்கிறது.
வெள்ளத்தால் அவதிப்பட்டு சிக்கி தவிக்கும் மக்களை அரசு நிர்வாகம் மீட்டு நடவடிக்கை எடுக்கவில்லை என்று அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி பயணம் மேற்கொண்டிருந்த போது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நிவாரண பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.
தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிர்வாகம் முழுமையாக உதவி செய்யவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: இப்போ நான் என்ன பண்ணிட்டு இருக்கேன்? ஊர் சுத்தி பாக்க வந்திருக்கேனா நானு? பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர்கள், மாவட்ட அதிகாரிகள் களத்தில் இருந்து வேலை பாத்துட்டு இருக்கோம்.
இது ஒரு இயற்கை பேரிடர்… எதிர்பார்த்ததை விட அதிக மழை பெய்ஞ்சிருக்கு.. தொடர்ந்து மீட்பு பணிகளை செய்துட்டு தான் இருக்கோம் என்று தெரிவித்தார்.