மோடியின் கண்களில் பயத்தை பாத்துட்டேன்…! பங்கம் செய்த ராகுல்
டெல்லி: பிரதமர் மோடியின் கண்களில் பயத்தை பார்த்துவிட்டேன் என்று ராகுல் காந்தி கூறி இருக்கிறார்.
2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கு காங்கிரஸ் மட்டுமல்லாது, அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந் நிலையில் டெல்லியில் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கூறியதாவது:
பிரதமர் மோடிக்கும், அதானிக்கும் என்ன உறவு? அவரின் ஷெல் கம்பெனிகளுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் எப்படி சென்றது? யாரு பணம் இது? ஷெல் கம்பெனிகள் நாட்டின் பாதுகாப்பு துறையில் முதலீடு செய்து இருக்கின்றன. ஏன் இது குறித்து பாதுகாப்பு துறை கேள்வி எழுப்பவில்லை.
அதானி, பிரதமர் மோடி அமர்ந்திருக்கும் போட்டோவை காட்டி நான் நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பினேன். இது குறித்து நான் பேசியது போது மோடியின் கண்களில் பயத்தை பார்த்தேன். கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் அமைச்சர்கள் அவதூறு கூறினர்.
அதானி பற்றி நான் பேசிய பின்னர் பாஜக என்னை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. அதானி, மோடி உறவு பற்றி கேள்வி எழுப்பியதே எம்பி பதவியில் இருந்து நான் தகுதி நீக்கம் செய்யப்பட காரணம்.
மற்றவர்களை போல் நான் பயப்படமாட்டேன். என்னை கைது செய்தாலும் நாட்டின் ஜனநாயகத்துக்கும், உண்மைக்கும் தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பேன் என்று கூறி உள்ளார். ராகுலின் பேட்டி அனைத்து ஊடகங்களில் முன்னிலைப்படுத்தி ஒளிபரப்பப்பட்டன.
அதே நேரத்தில் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியதை காங்கிரஸ் கட்சி இணைய ஊடகங்களில் தமிழ்படுத்தி வெளியிட்டு உள்ளது. அந்த வீடியோவை இங்கே கீழே காணலாம்: