மெய்யாலுமே... வனிதாவுக்கு ப்ரோபோஸ் செய்த பவர்ஸ்டார் சீனிவாசன்…!
சென்னை: நடிகை வனிதா விஜயகுமாருடன் கல்யாணம் என்பது கடவுள் கையில் என்று நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுடன் இருக்கும் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் ரிலீஸ் செய்தார் நடிகை வனிதா விஜயகுமார். அவ்வளவு தான்… இணையதளமே பற்றிக் கொள்ளும் அளவுக்கு சென்றுவிட்டது.
பவருக்கும், வனிதாவுக்கும் கல்யாணம் என்ற தகவல்கள் பரவின. 4வது திருமணம் செய்துவிட்டார் வனிதா என்று செய்திகள் வெளியாகின. என்ன நடக்கிறது என்று அனைவரும் புரிந்து கொள்வதற்குள் மீண்டும் ஒரு முத்த போட்டோ வெளியாகி குழப்பத்தின் உச்சிக்கே அனைவரும் போயினர்.
அதை தொடர்ந்து, சென்னையில் வனிதா விஜயகுமாரும், பவர்ஸ்டார் சீனிவாசனும் பிரஸ்மீட் தந்தனர். அதில் வனிதா கோபப்பட்டு பேசியதோடு, 4 என்ன 40 திருமணம் செய்து கொள்வேன், அது என் இஷ்டம் என்றார்.
அதன்பின்னர் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் பேசினார். அவர் கூறியது பிரஸ்மீட்டில் ஹைலைட். அவர் கூறியது இதுதான்: நாங்க நடிக்கும் படம் போஸ்டர்களால் பேமசாகிவிட்டது.
எனக்கும், வனிதாவுக்கும் கல்யாணம் என்பது கடவுளின் கையில்தான் இருக்கிறது. படத்தை விளம்பர படுத்த வேண்டும், அதற்காக தான் போட்டோ எடுத்தோம் என்று பேசினார்.
அவரது பேட்டிக்கு பின்னர் ரசிகர்கள் கூறியது தான் டாப். வனிதாவுடன் போட்டோ என்ற சர்ச்சை ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருந்தாலும் கிடைத்த கேப்பில் மெய்யாலுமே வனிதாவை கல்யாணம் பண்ணிக்க ரெடி என்று மனதில் உள்ளதை ப்ரோபோஸ் செய்துவிட்டார் என்கின்றனர்.