என்னா அடி….! சின்னவர் தொகுதியில் பாஜகவினரை ‘பொளந்த’ திமுக…! VIRAL VIDEO
சென்னை: சென்னையில் பாஜகவினரை திமுகவினர் அடி பின்னி எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. கட்சி நிர்வாகிகள் நியமனம், மாநிலம் முழுவதும் கூட்டங்கள், வேட்பாளர்கள் தேர்வு, வாக்காளர் சரிபார்ப்பு, பூத் கமிட்டி என மும்முரமாய் இருக்கின்றன.
தமிழகத்தில் எப்போதும் போல முன்னணியாக திமுக தமது தேர்தல் வேலைகளை பார்க்க தொடங்கி ஜரூராக வேலை செய்து வருகிறது. அதிமுக, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளும் களத்தில் சுறுசுறுப்பாகி இருக்கின்றன.
இந் நிலையில் சென்னையில் பாஜகவினரை திமுகவினரை அடி பொளக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி உள்ளன. இந்த சம்பவம் திருவல்லிக்கேணியில் நடந்ததாக வீடியோவில் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
அமைச்சர் உதயநிதியின் தொகுதியான திருவல்லிக்கேணியில் பாஜகவினர் வந்துள்ளனர். அங்குள்ள அயோத்தியா குப்பத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாமில் அவர்கள் இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த திமுகவினர் பாஜக நிர்வாகி சுறா சுமனை தாக்கியுள்ளனர்.
தாக்குதல் போதாது என்று, அங்கிருந்த நாற்காலிகள், டேபிள் போன்றவற்றை உடைத்து தள்ளி இருக்கின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அதே இடத்தில் முகாம் நடந்து முடிந்தாலும், திமுகவினர் அராஜகத்தை பாஜக நிர்வாகிகள் கண்டித்துள்ளனர்.
பாஜகவினரை திமுகவினர் அடித்து உதைக்கும் காட்சிகள் வீடியோவாக கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.