அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேர்ந்த ‘அதிகாலை’ சம்பவம்..! எம்எல்ஏக்கள் ஷாக்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் டுவிட்டர் கணக்கு திடீரென முடக்கம் செய்யப்பட்டு உள்ளதால் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக அமைச்சர்களில் பாஜகவுக்கு வேப்பங்காயாக இருக்கும் ஒரே அமைச்சர் யார் என்றால் அது மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தான். அதுவும் அண்ணாமலையின் all time target செந்தில் பாலாஜி. பேட்டிகள், விமர்சனங்கள் என 2 பேரும் மாறி, மாறி தமிழக அரசியலை அதகளம் செய்து வருகின்றனர்.
இந் நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு உள்ளது, தொண்டர்களுக்கு அதிர்ச்சியை தந்து இருக்கிறது. இந்த விவரத்தை திமுக எம்எல்ஏ தமது டுவிட்டர் பக்கத்தில் கூறி உள்ளார்.
அதில் குறிப்பிட்டு உள்ளதாவது: மாண்புமிகு அமைச்சர் செந்தில் பாலாஜியின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு இருக்கிறது. இது பற்றி டுவிட்டர் நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்துள்ளோம்.
முடக்கப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜியின் கணக்கு விரைவில் மீட்டெடுக்கப்படும் என்று கூறி உள்ளார். டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு உள்ளதால் Variorius என்ற பெயரில் தமது கணக்கை செந்தில் பாலாஜி மாற்றி உள்ளார். அதில், நாங்கள் கிரிப்டோ பணப்பைகளை உருவாக்கினோம், அனைத்து பணமும் ஹெல்பிண்டியா நிறுவனத்துக்கு அனுப்பப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.