Corona: இனி.. சனியும் ஞாயிறு தான்… அதிரடிக்கு தயாராகும் தமிழகம்…?
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றுகள் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளதால் சனிக்கிழமையும் முழு லாக்டவுன் கொண்டு வரப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
எப்போது முடியும் இந்த துயரம் என்று நித்தமும் நினைக்கும் அளவுக்கு உள்ளது தமிழகத்தின் கொரோனா தொற்றின் நிலைமை. யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு ஒரே வாரத்தில் உச்சத்தை எட்டி நேற்று மட்டும் 23, 989 ஆக தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி இருக்கிறது.
தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை என பல மாவட்டங்களில் பாதிப்புகள் மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. கடந்த 12ம் தேதி 15 ஆயிரம் என்று இருந்த தினசரி தொற்று நான்கே நாட்களில் 23 ஆயிரத்தை கடந்திருக்கிறது.
இந் நிலையில் தொடர் பாதிப்புகள் காரணமாக கடும் கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு தயாராகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே ஞாயிறு முழு ஊரடங்கு அறிவித்தாகிவிட்டது. தினசரி இரவு நேர லாக்டவுன் உள்ளது.
இனி சனிக்கிழமையும் லாக்டவுன் அறிவித்து கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வரலாமா என்று தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தொடரும் கொரோனா தொற்றுக்களை கட்டுப்பாட்டில் கொண்டு மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம் என்பதால் இந்த லாக்டவுன் நடவடிக்கை அவசியம் என்று தமிழக அரசு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களை வீடுகளில் இருக்க வைத்தாலே நோய் தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்பதால் இதுபோன்ற நடவடிக்கை தற்போதுள்ள சூழலில் தேவையாக உள்ளது என்று தமிழக அரசு கருதுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கடந்த காலங்களில் சனிக்கிழமையும் முழு ஊரடங்கு இருந்தது என்பதையும், அதன் மூலம் நோய் தொற்று பரவல் எப்படி கட்டுப்படுத்தப்பட்டது என்பதையும் சுகாதாரத்துறை தரப்பில் இருந்து அரசின் கவனத்துக்கு ஏற்கனவே கொண்டு செல்லப்பட்டு விட்டதாக தெரிகிறது.
இந்த நடவடிக்கை மிகுந்த பலன் கொடுக்கும் என்பதால் அதுபற்றி தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. லாக்டவுன் என்று அறிவித்தாலும் மக்களின் பொருளாதாரத்தில் எவ்வித சேதாரமும் இருக்காமல் கவனமாக கையாள வேண்டும் என்று தமிழக அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.