நடிகர் அஜித் வீட்டில் அதிகாலையில் நுழைந்த போலீஸ் படை…! ரசிகர்கள் பதற்றம்…!
சென்னை: நடிகர் அஜித் குமாரின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல் சினிமா உலகில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது, அது உடனடியாக வெடிக்கும் என்று அடையாளம் தெரியாத ஒருவர் போலிஸ் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்ணை அழைத்து பேசினார். இதையடுத்து, நீலாங்கரை போலீசார் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈஞ்சம்பக்கத்தில் உள்ள அஜித்தின் வீட்டிற்கு வந்து தேடுதல் நடத்தினர்.
வெடிகுண்டு வல்லுநர்களும் அழைக்கப்பட்டனர். வெடிகுண்டு இருக்கிறதா என்று மோப்ப நாய்கள் உதவியுடன் 1 மணி நேரம் தீவிர தேடுதல் வேட்டையும் நடத்தப்பட்டது.
கடைசியில் அது வெடிகுண்டு புரளி என்று தெரிய வந்தது. இருப்பினும், தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு அஜித்தின் வீட்டில் இதேபோன்ற வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.