Sunday, May 04 12:42 pm

Breaking News

Trending News :

no image

முதலமைச்சருக்கு கொரோனா…! மக்களே உஷார்


கொரோனா ஒரு பக்கம் மீண்டும் மக்களை வாட்டி வதைக்க ஆரம்பித்து உள்ளது. இந்த முறையும் அரசியல்வாதிகளையும் தொற்றி அதிர வைத்துள்ளது.

அதில் லேட்டஸ்ட்டாக ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலொட்டுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. தம்முடன் தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார்.

கொரோனா காரணமாக, தமது பணிகளை வீட்டில் இருந்தே செய்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந் நிலையில் முன்னாள் முதலமைச்சரும், மாநில பாஜக தலைவருமான வசுந்தரா ராஜேவுக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதை அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். மருத்துவ பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உள்ளது, மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் ஓய்வில் உள்ளேன், என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொண்டு பாதுகாப்பாக இருங்கள் என்று கூறி உள்ளார்.

நாட்டில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள கொரோனா தொற்றால் சுகாதார முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளன. 

Most Popular