நம்பாதீங்க.. நம்பவே நம்பாதீங்க…! நான் இல்லை…! டிஜிபி சைலேந்திர பாபு சொன்ன விஷயம்
சென்னை: டிஜிபி பெயரில் உலா வந்து கொண்டிருக்கும் போலி எஸ்எம்எஸ்களை நம்ப வேண்டாம் என்று தமிழக டிஜிபி அலுவலகம் அறிவுறுத்தி உள்ளது.
நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்படித்தான் மோசடி பண்ண வேண்டும் என்ற எல்லை இல்லாமல் தினுசு, தினுசான டெக்னிக்குகளை மோசடி பேர்வழிகள் கையில் எடுத்து வருகின்றனர்.
அதில் லேட்டஸ்ட்டாக டிஜிபி பெயரில் வாட்ஸ் அப், எஸ்எம்எஸ்கள் உலா வருவதாக தெரிந்தது. இதையடுத்து தமிழக டிஜிபி அலுவலகம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டு உள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
காவல்துறை தலைமை இயக்குநர் என்று தங்களை அறிமுகப்படுத்துக் கொண்டு போலி நபர்கள் அமேசான் அன்பளிப்பு கூப்பன்கள் வாங்கி அனுப்பும்படி 'வாட்ஸ்-அப், SMS குறுஞ்செய்தி அனுப்பவதாக தெரிய வருகிறது.
இந்த போலியான குறுஞ்செய்தியை பொருட்படுத்த வேண்டாம். போலி குறுஞ்செய்திகளை அனுப்புவோர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலி குறுஞ்செய்திகளை அனுப்பும் அந்த நபரை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.