கேரளாவில் 3 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு….! 95000 பேருக்கு நீடிக்கும் சிகிச்சை
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதிதாக 8,764 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இன்று புதிதாக 8,764 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
அதன் மூலம், ஒட்டு மொத்த பாதிப்பு 3,03,897 ஆக உயர்ந்து இருக்கிறது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 1,047 ஆக அதிகரித்து உள்ளது. இன்று ஒரே நாளில் 7,723 பேர் தொற்றில் இருந்து குணமடைந்தனர். தற்போது 95,407 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.