Sunday, May 04 12:27 pm

Breaking News

Trending News :

no image

தெரியுமா..? 10 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் வாங்கலாம்…!


டெல்லி: பேடிஎம் சலுகையில் 10 ரூபாய்க்கு வீட்டு உபயோகத்துக்கான சமையல் கேஸ் சிலிண்டர் வாங்கி கொள்ளலாம்.

வீடுகளில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் கேஸ் சிலிண்டர்களை புக் செய்ய ஏராளமான வழிகள், வசதிகள் இப்போது வந்துவிட்டன. குறிப்பாக செல்போன் ஆப் மூலம் கேஸ் சிலிண்டரை முன் பதிவு செய்தால் உடனடியாக சிலிண்டர் வீடு தேடி வரும்.

இப்படிப்பட்ட ஆப்களில் பதிவு செய்தால் வாடிக்கையாளர்களுக்கு நிறைய சலுகைகளும் கிடைத்து வருகின்றன. ஆகையால் இந்த ஆப்களில் பதிவு செய்வோர் எண்ணிக்கை மிக அதிகம். அப்படித்தான் பேடிஎம் நிறுவனமானது சிலிண்டர் முன்பதிவுக்கு ஒரு வித்தியமான, கவர்ச்சிக்கர சலுகை வழங்குகிறது.

பேடிஎம் ஆப் வழியாக கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்தால், வாடிக்கையாளருக்கு 800 ரூபாய் கேஷ் பேக் ஆபர் கிடைக்கும். இச்சலுகை வரும் 30ம் தேதி வரையில் உண்டு. எனவே வாடிக்கையாளர்கள் உடனடியாக புக் செய்து இந்த சலுகையை பெறலாம்.

பேடிஎம் ஆப் மூலம் முதல் தடவை சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். அதை எப்படி புக் செய்ய வேண்டும் என்பதற்கான வழிமுறைகளும் வெளியிடப்பட்டு உள்ளன.

இதோ அதற்கான வழிமுறைகள்… மிகவும் கவனமாக குறித்துக் கொள்ளுங்கள்….

பேடிஎம் ஆப்பில் book cylinder என்று கிளிக் செய்ய வேண்டும். உங்களின் சிலிண்டர் வினியோகம் செய்யும் கம்பெனி பெயரை செலக்ட் செய்ய வேண்டும். பாரத் கேஸ், இன்டேன், ஹெச்பி என 3 நிறுவனங்களில் உங்களின் நிறுவனம் எதுவோ அதை செலக்ட் செய்ய வேண்டும்.

பிறகு உங்கள் செல்போன் எண் அல்லது எல்பிஜி ஐடி எண்ணை பதிவிட்டு proceed என்று கொடுக்க வேண்டும்.

இப்போது தான் நீங்கள் ஒரு முக்கிய விஷயத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும். நீங்கள் முன்பதிவு செய்யும் போது, FIRSTLPG என்ற புரோமோ கோட் பதிவு செய்தால் மட்டுமே இந்த கேஷ் பேக் சலுகை உங்களுக்கு கிடைக்கும். சந்தையில் இப்போது ஒரு சிலிண்டர் விலை 810 என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற பேடிஎம் ஆப் வழியாக முன்பதிவு செய்யும் பட்சத்தில் உங்களுக்கு 800 ரூபாய் மிச்சமாகும்… 10 ரூபாயில் கேஸ் சிலிண்டர் கிடைக்கும்…!

Most Popular