Sunday, May 04 11:56 am

Breaking News

Trending News :

no image

ரஜினி படம் இயக்கிய பிரபல இயக்குநருக்கு வந்த நிலைமை….!


ரஜினியின் படத்தை அசால்ட்டாக இயக்கிய ஏஆர் முருகதாஸ், நடிகர் அல்லு அர்ஜூனை சந்திக்க முடியாமல் இருப்பது பற்றிதான் திரையுலகில் முக்கிய பேச்சாக இருக்கிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக இருப்பவர் ஏஆர் முருகதாஸ். நடிகர்கள் விஜய், அஜித் ஆகியோருக்கு மிக பெரிய ஹிட் படங்களை தந்தவர். 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படத்தை தயாரிக்கும் ஜாம்பவனான அவரின் நிலைமை இப்போது அதல பாதாளத்துக்கு போயிருக்கிறது.

கடைசியாக அவர் டைரக்ட் செய்த படம் தர்பார். ரஜினி என்ற மாஸ் ஹீரோ இருந்தும் முருகதாசால் வெற்றி படத்தை கொடுக்கமுடியவில்லை. அதன் பிறகு இன்னமும் எந்த படமும் இயக்காமல் உள்ளார். தர்பார் முடிந்தபின் நடிகர் விஜய்க்கு கதை சொல்லி பார்த்தார்.

துப்பாக்கி, கத்தி, சர்க்கார் என்று 3 ஹிட்டுகளை விஜய்க்கு கொடுத்த முருகதாசால் மீண்டும் ஒரு கதையை தயார் செய்து கொடுக்க முடியவில்லை. முருகதாஸ் சொன்ன கதையில் திருப்தி இல்லை என்று விஜய் அனுப்பி வைத்துவிட்டதாக கூறுகின்றனர்.

சரி… என்ன பண்ணலாம் என்று யோசித்தவர் அனிமேஷன் படத்தை இயக்க பிரபல நிறுவனத்துடன் பேசி வைத்திருந்தார். ஆனால் லைம் லைட்டில் இயக்கும் இயக்குநர் ஒருவர் அனிமேஷன் படத்தை இயக்கினால் பீல்டு அவுட் என்று பெயர் வந்துவிடும் என்று நலம் விரும்பிகள் எச்சரிக்க அந்த திட்டத்தையும் முருகதாஸ் ஒத்தி வைத்துவிட்டாராம்.

விஜய் இல்லை என்றாகிவிட்டது என்பதால் வேறு பல முன்னணி நடிகர்களை சந்தித்து கதை கூறினாராம்… ஆனால் அனைவரும் இவரது கதைகள் அனைத்து இவர் இயக்கிய படங்களின் மிக்சிங்காக இருப்பதாக தோன்ற ரிஜெக்ட் செய்து விட்டனராம்.

இப்போது தெலுங்கு கதாநாயகன், அல்லு அர்ஜூனனை அணுகி இருக்கிறாராம். ஆனால் முருகதாசின் கடந்த கால கதை திருட்டுகளை அறிந்த அவர் நடிக்க தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒவ்வொரு இயக்குநரும் ரஜினியை வைத்து படம் பண்ண சான்ஸ் கிடைக்காதா என்று தவமாய் தவம் கிடைக்க… அவரை வைத்து படம் பண்ணிவிட்டு இப்போது வாய்ப்பு இல்லாமல் முருகதாஸ் இருக்கிறார் என்று திரையுலகில் பேச்சு எழும்பி உள்ளது. அவரது திரையுலகின் பயணம் சரிவு என்பதையே இது காட்டுகிறது என்றும் கூறப்படுகிறது.

Most Popular