Sunday, May 04 12:18 pm

Breaking News

Trending News :

no image

சாமியார் டிரெஸ்… மொட்டை தலை..! உத்து பாத்தா 'அட' நம்ம தல…!


சாமியார்கள் அணியும் ஆடை அணிந்து, தலையை மொட்டையடித்து கொண்டு காட்சி தரும் தோனியின் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிக்கரமான, சாதனைகள் பல படைத்த கேப்டன்களில் ஒருவர் தல தோனி. ஹேர் ஸ்டைல், ஹெலிகாப்டர் ஷாட் என்று ரசிகர்களை கட்டிப்போட்டவர்.  

அதெல்லாம் அப்போ… இப்போது தோனியின் லேட்டஸ்ட் போட்டோ என்று ஒரு போட்டோ ஒன்று இணையங்களில் றெக்கை கட்டி பறந்து வருகிறது. போட்டோவில் மொட்டையடித்துக் கொண்டு, சாமியார் ஆடை மாட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.

இந்த போட்டோவை தமது டுவிட்டர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டு ரசிர்களே.. கருத்துகளை சொல்லுங்கள்  என்றும் கேட்டுள்ளது. தோனியின் இந்த  கெட்டப்பை கண்டு குழம்பி போன ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் இது என்ன கெட்டப் என்று கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.

Most Popular