அக். 15 முதல் தியேட்டர்களை திறக்கலாம்…! மத்திய அரசு அனுமதி
டெல்லி: அக்டோபர் 15ம் தேதி முதல் திரையரங்குகள் செயல்பட மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
கொரோனா பொது முடக்கத்தின் 5ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு தற்போது அறிவித்து உள்ளது. சினிமா தியேட்டர்கள், விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காக நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்கள் உள்ளிட்டவை அக். 15 முதல் மீண்டும் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 5 முதல் ஹோட்டல்கள், மதுபான விடுதிகள் உள்ளிட்டவை 50 சதவிகித இருக்கைகளுடன் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் திறப்பது பற்றி மாநிலங்கள் முடிவெடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.